If you like the content here, Please support my blog by clicking Follow below.

Sunday, May 8, 2011

இது அன்னையர் தின வாழ்த்து அல்ல!!!

தன் பசியோடு எனக்கு சமைத்து
நான் பசியாற கண்டு அவள் பசியாறி,
தன் வலியோடு என்னை ஸ்பரிசித்து
நான் தூங்க கண்டு அவள் வலிமறந்து,
தன் துணி அழுக்காக என் துணி துவைத்து
நான் மின்ன கண்டு அவள் கண்கள் மின்ன,
தன் வாழ்கை எனக்காக வாழ்ந்து
நான் வாழ்வதை அவள் போல எண்ணி....

என் பசி, என் வலி, என் நலம், என் வாழ்கை,
ஒரு பொழுதும் என்னது மட்டுமாய் இருந்ததே இல்லை
என் ஊனையும் உயிரையும் எனக்கு ஊட்டியவள்
அதில் இரண்டற கலந்ததில் மாயமும் இல்லை!

அம்மா, இது உன் குழந்தை உனக்கு அனுப்பும்
அன்னையர் தின வாழ்த்து அல்ல,
எனக்காய் உன்னை சமர்ப்பித்த உனக்கு,
நான் என்றும் உன் சமர்ப்பணம் என்னும் அன்னையர் தின உறுதி!!!

                                                                                             - கண்ணன்


2 comments:

  1. நல்ல கவிதைக்கு நன்றி!!!!
    உலகத்தின் ஒரே சுயனலமற்ற உயிர் :)

    ReplyDelete
  2. Worth saying these words for lifetime and its never endless......


    Veena...

    ReplyDelete